உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / செங்கையில் விநாயகர் சிலைகள் கரைப்பு

செங்கையில் விநாயகர் சிலைகள் கரைப்பு

செங்கல்பட்டு மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தி பண்டிகையையொட்டி ஹிந்து முன்னணி உள்ளிட்ட அமைப்பினர் மற்றும் பொதுமக்களால் வைத்து வழிபடப்பட்ட விநாயகர் சிலைகள், நேற்று பல்வேறு பகுதிகளில், கடலில் கரைக்கப்பட்டன. இதன்படி, ஹிந்து முன்னணி சார்பில் அமைக்கப்பட்ட விநாயகர் சிலைகள், திருப்போரூர் ஓ.எம்.ஆர்., சாலை வழியாக வாகனங்களில் ஊர்வலமாக கொண்டுசெல்லப்பட்டு, மாமல்லபுரம் கடற்கரை பகுதியில் கரைக்கப்பட்டன. ஊர்வலத்தில், சிறுவர்களின் சிலம்பாட்டம், பேண்டு வாத்தியங்கள் முழங்கின. பின், சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. செய்யூர் செய்யூர் பகுதியில் விநாயகர் சதுர்த்தியை தொடர்ந்து பிரதிஷ்டை செய்யப்பட்ட 153 விநாயகர் சிலைகள் நேற்று, விஜர்சனம் செய்யப்பட்டன. மதுராந்தகம், அச்சிறுபாக்கம், சித்தாமூர், கூவத்துார், பவுஞ்சூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த இந்த விநாயகர் சிலைகள் மேள தாளத்துடன், பட்டாசுகள் வெடித்து ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டன. செய்யூர் பகுதியில் போலீஸ் அனுமதி வழங்கியிருந்த கடப்பாக்கம், கடலுார்குப்பம், தழுதாளிகுப்பம் உள்ளிட்ட கடற்கரைகளில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கரைக்கப்பட்டன. நேற்று கடப்பாக்கத்தில் 62, தழுதாளிகுப்பத்தில் 41, கடலுார் குப்பத்தில் 50, என, மொத்தம் 153 சிலைகள் கடலில் கரைக்கப்பட்டன. - நமது நிருபர் குழு --


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை