மேலும் செய்திகள்
கஞ்சா வழக்கில் மூவர் கைது
16-Oct-2024
மறைமலை நகர்:செங்கல்பட்டு அடுத்த ஆத்துார் தென்பாதி கிராமத்தை சேர்ந்தவர் போனிஸ் நந்தா, 26. இவர் மீது, செங்கல்பட்டு தாலுகா காவல் நலையத்தில், கஞ்சா, அடிதடி, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.இந்நிலையில், நேற்று முன்தினம் அமணம்பாக்கம் சுடுகாட்டில், போனிஸ் நந்தா கஞ்சா விற்பனை செய்து வருவதாக, தாலுகா போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.செங்கல்பட்டு தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் நடராஜன் தலைமையில் சென்ற போலீசார், போனிஸ் நந்தாவை பிடிக்க முயன்ற போது, தப்ப முயன்ற அவருக்கு, இடறி கீழே விழுந்து, வலது காலில் முறிவு ஏற்பட்டது.போனிஸ் நந்தாவை மீட்ட போலீசார், செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளித்த பின், செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
16-Oct-2024