மேலும் செய்திகள்
மழைநீர் கால்வாயில் கழிவு நீர் தேக்கம்
01-Feb-2025
மறைமலை நகர், மறைமலைநகர் அடுத்த கோகுலாபுரம் -- கடம்பூர் சாலையின் இருபுறமும், காப்புக்காடுகள் உள்ளன. இதில் மான், முயல், மயில் உள்ளிட்ட பல்வேறு வன உயிரினங்கள் உள்ளன.மேலும், பல வகையான அரிய வகை மரங்களும் உள்ளன. இங்கு கடம்பூர், கருநிலம், கொண்டமங்கலம், கோவிந்தாபுரம் பகுதியில் உள்ள வனப்பகுதியில், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மறைமலைநகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் இருந்து எடுக்கப்படும் கழிவுநீர், லாரிகளில் கொண்டுவந்து கொட்டப்படுகிறது.இதனால், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுவதுடன், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:மறைமலைநகர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் குடியிருப்புகள் அதிகரித்து வரும் சூழலில், வனப்பகுதியில் பழைய வீட்டு உபயோக பொருட்கள், தொழிற்சாலை கழிவுநீர் உள்ளிட்டவை தொடர்ந்து கொட்டப்பட்டு வருகின்றன.இவை மழைக்காலங்களில் கடம்பூர், கருநிலம் ஏரிகளில் நேரடியாக கலக்கின்றன.இதன் காரணமாக, புறநகரில் சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டு வருகிறது. எனவே, இவற்றை தடுக்க வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
01-Feb-2025