குப்பை கழிவுகள் தேக்கம் கரும்பாக்கத்தில் சீர்கேடு
திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கரும்பாக்கம் பிரதான சாலையில் குடியிருப்பு வீடுகள், வணிக கடைகள், பள்ளிகள் உள்ளன. மேலும், இச்சாலை வழியாக பாலூர், பூயிலுப்பை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும், மற்ற தெருக்களுக்கும் சென்று வருகின்றனர்.ஊாராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை சேகரித்து, அவ்வப்போது அப்புறப்படுத்தப்படுகின்றன. எனினும், வணிக கடைகள், வீடுகளில் இருந்து வெளியேறும் குப்பை கழிவுகள், இச்சாலையோரம் உள்ள காலி இடங்களில் கொட்டப்படுகின்றன. அவற்றை ஊராட்சி நிர்வாகம் முறையாக அப்புறப்படுத்தாததால், குப்பை குவியலாக காட்சியளிக்கிறது. இதனால், அங்கு கொசு உற்பத்தி மற்றும் துர்நாற்றம் வீசுகிறது.எனவே, ஊராட்சி நிர்வாகம் குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.