உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இந்திய மக்களின் ஒற்றுமை ஜெர்மனி தம்பதி வியப்பு

இந்திய மக்களின் ஒற்றுமை ஜெர்மனி தம்பதி வியப்பு

மாமல்லபுரம்:இந்திய கிராம கலாசாரம் அறியும் ஆர்வத்தில், ஜெர்மன் நாட்டு தம்பதி பல்வேறு மாநிலங்கள் வழியாக, இலங்கை நாட்டிற்கு சைக்கிளில் பயணம் செய்கின்றனர்.இந்தியாவில் உள்ள பாரம்பரிய நினைவுச் சின்னங்கள், இயற்கை சுற்றுச்சூழல் பகுதிகள் உள்ளிட்ட இடங்களை காணவும், ஆன்மிக வழிபாட்டிற்காகவும், சர்வதேச நாட்டுப் பயணியர் சுற்றுலா வருகின்றனர். பெரும்பாலானோர், குறிப்பிட்ட சில நாட்கள் தங்கி சுற்றிப் பார்க்கும் வகையில் திட்டமிட்டு பேருந்து, கார் போன்ற வாகனங்களில் பயணம் செய்வர்.மேற்கு ஐரோப்பிய நாடான ஜெர்மனியைச் சேர்ந்த தம்பதி ஸ்டீபன், 54, - சிபியா, 47. இருவரும், அந்நாட்டு வனத்துறை ஊழியர்களாக பணியாற்றுகின்றனர்.இந்தியாவிற்கு சுற்றுலா வந்துள்ள இவர்கள் தெலங்கானா மாநிலம், ஐதராபாத்தில் துவங்கி ஆந்திரா, தமிழகம், புதுச்சேரி வழியாக, இலங்கை நாட்டிற்கு பயணம் செய்கின்றனர்.இவர்கள், மாமல்லபுரத்திலிருந்து புதுச்சேரி செல்லும் வழியில், கல்பாக்கம் அருகில் கடந்தனர்.சைக்கிள் பயணம் குறித்து, அவர்கள் கூறியதாவது:பல நாடுகளுக்கு சுற்றுலா செல்வது, எங்கள் வழக்கம். ஒரு நாட்டின் கலாசாரம், மக்களின் வாழ்வியல் முறை, கிராமத்தில் பணிச்சூழல் உள்ளிட்டவற்றை அறியவும், இயற்கைச் சூழலை ரசிக்கவும், சைக்கிள் பயணம் தான் சிறந்தது.ஜெர்மனி நாட்டிலிருந்து ஐதராபாத்திற்கு, விமானத்தில் வந்தோம்.கும்பமேளா நடக்கும் பகுதியில் மூன்று நாட்கள் தங்கி, விழாவை ரசித்து உற்சாகமடைந்தோம்.நாங்கள் கொண்டுவந்த பிரத்யேக சைக்கிளில், ஜன., 1ம் தேதியிலிருந்து, தினமும் சைக்கிளில் பயணம் செய்து, தற்போது தமிழகம் வந்துள்ளோம். மாலை வரை சைக்கிள் ஓட்டி, இரவு ஓய்வெடுப்போம். புதுச்சேரி, தென்மாவட்டங்கள் வழியாக, மேலும் ஒன்றரை மாதங்கள் பயணம் செய்து, இலங்கை நாட்டிற்கு செல்கிறோம்.இந்தியர்கள் பல மொழி, கலாசாரம் இடையே, ஒற்றுமையாக இருப்பது வியப்பாக உள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை