உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அரசு மணிலா கொள்முதல் நிலையம் செய்யூர் பகுதியில் அமைக்க எதிர்பார்ப்பு

அரசு மணிலா கொள்முதல் நிலையம் செய்யூர் பகுதியில் அமைக்க எதிர்பார்ப்பு

செய்யூர்:செய்யூர் பகுதியில், அரசு மணிலா கொள்முதல் நிலையம் அமைத்து, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மணிலா கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டத்திற்கு உட்பட்ட லத்துார் மற்றும் சித்தாமூர் ஒன்றியத்தில், 84 ஊராட்சிகள் உள்ளன.இவை, 30,000 ஏக்கர் பரப்பளவு விவசாய நிலத்தைக் கொண்டுள்ளன. விவசாயமே இப்பகுதி மக்களின் பிரதான தொழில்.ஏரி, கிணறு, ஆழ்துளைக்கிணறு போன்ற பல்வேறு நீராதாரங்கள் வாயிலாக நெல், மணிலா, கரும்பு, எள், உளுந்து, தர்ப்பூசணி ஆகியவை பருவத்திற்கு ஏற்றது போல பயிரிடப்படுகின்றன.இப்பகுதியில் 90-105 நாட்களில் மகசூல் தரக்கூடிய ஜி2, ஜி7, கதிரி உள்ளிட்ட பல்வேறு ரக மணிலா, கடந்த டிச., மற்றும் ஜன., மாதத்தில் பயிரிடப்பட்டது.பயிரிடப்பட்ட மணிலா தற்போது அறுவடை செய்யும் நிலையில் உள்ளதால், விவசாயிகள் மணிலா அறுவடை செய்யும் பணியில் ஆர்வமாக ஈடுபட்டு வருகின்றனர்.அறுவடை செய்யப்படும் மணிலாவை, தனியார் வியாபாரிகளிடம் விவசாயிகள் விற்பனை செய்து வருகின்றனர். ஆனால், தனியார் வியாபாரிகளிடம் மணிலாவிற்கு தகுந்த விலை கிடைப்பதில்லை என, விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.எனவே, வேளாண் துறை அதிகாரிகள் மணிலாவிற்கு விலை நிர்ணயம் செய்து, நெல் கொள்முதல் செய்வது போல, மணிலாவையும் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை