உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

சாலையில் வழிந்து ஓடும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு

செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பழைய ஜி.எஸ்.டி., சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் புதிய பேருந்து நிலையம் அருகில் கடந்த மூன்று நாட்களாக கழிவு நீர் வழிந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. இது வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் படுவதால் கடும் அவதியடைந்து வருகின்றனர்.இது குறித்து பொது மக்கள் கூறியதாவது: செங்கல்பட்டு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள வீடுகள் மற்றும் வணிக கட்டடங்களில் இருந்து வெளியேறும் கழிவு நீர் கால்வாயில் அடைப்பு ஏற்பட்டு சாலையில் வழிந்து ஓடுகிறது.செங்கல்பட்டு மாவட்டத்தின் தலைநகர் என்பதால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மருத்துவம், வேலைவாய்ப்பு ,கல்வி, கலெக்டர் அலுவலகம், நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்களுக்கும் பொது மக்கள் இந்த வழியாக வந்து செல்கின்றனர்.கழிவு நீர் செல்வதோடு துர்நாற்றம் வீசுகிறது. அதிகாரிகள் இந்த சாலை வழியாகவே தினமும் இந்த வழியாக வந்து செல்லும் அவர்களும் கண்டும் காணாமல் உள்ளனர்.மாவட்ட நிர்வாகம் இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ