மேலும் செய்திகள்
இ.சி.ஆர்., சாலையில் மண் குவியல்
13-Oct-2024
மாமல்லபுரம்: கடலோர பகுதிகளில் கனமழை பெய்து, இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.வங்க கடலில் காற்றழுத்த தாழ்வுநிலை உருவாகியுள்ள நிலையில், கடலோர பகுதிகளில், கடந்த இரண்டு நாட்களாக கனமழை பெய்கிறது. மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம், புதுப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில், பொதுமக்களின் இயல்புவாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில், பயணியர் வருகையின்றி வெறிச்சோடி, சுற்றுலா முடங்கியது. திருக்கழுக்குன்றம் தாலுகா பகுதிகளில், நடவு பணிகள் பாதிக்கப்பட்டது. மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்லாமல் தவிர்த்தனர்.மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய பகுதிகளில், பேரூராட்சி நிர்வாகங்கள், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மரம் அறுப்பு கருவி, வெள்ள மீட்பு சாதனங்கள், ஜெனரேட்டர் ஆகியவற்றுடன் தயார் நிலையில் உள்ளனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், கடலோர பகுதியில் முகாமிட்டுள்ளனர்.திருக்கழுக்குன்றத்தில், தாசில்தார் ராதா தலைமையில், உள்ளாட்சி பிரதிநிதிகள், தன்னார்வலர்கள் ஆகியோருக்கு, வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது குறித்து, தீயணைப்பு வீரர்கள் பயிற்சியளித்தனர். மாமல்லபுரம், திருக்கழுக்குன்றம் ஆகிய குறுவட்ட பகுதிகளுக்கு, பேரூராட்சிகள் உதவி இயக்குனர் லதாவை கண்காணிப்பு அலுவலராக கொண்டு, குழு அமைக்கப்பட்டுள்ளது.
13-Oct-2024