உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உயர் ரத்த அழுத்தம் நோய் கண்டறிதல் முகாம்

உயர் ரத்த அழுத்தம் நோய் கண்டறிதல் முகாம்

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த கோவளத்தில், உலக உயர் ரத்த அழுத்த தினத்தை முன்னிட்டு, கோவளம் வெங்கட்ராமன் அறக்கட்டளை, செட்டிநாடு மருத்துவமனை சார்பில், உயர் ரத்த அழுத்த நோய் கண்டறிதல் முகாம், நடந்தது.இதில், மருத்துவ குழுவினர் பங்கேற்று பொதுமக்களுக்கு, உயர் ரத்த அழுத்தத்தைத் தடுக்கும் வழிமுறைகளுக்கான சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கினர்.மேலும், அவரவர் வயதிற்கு ஏற்றார்போல், உணவுப் பழக்கத்தை மாற்ற வேண்டும். நடை, ஓட்டம், நீச்சல், சைக்கிள் போன்ற உடற்பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.யோகா, தியானம் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் பயிற்சியை செய்ய வேண்டும் எனவும், மருத்துவக் குழுவினர் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை