உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  காலவாக்கம் ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுது

 காலவாக்கம் ரவுண்டானா பகுதியில் உயர்கோபுர மின் விளக்கு பழுது

திருப்போரூர்: காலவாக்கம் ஆறுவழிச்சாலை ரவுண்டானா பகுதியில் பழுதடைந்துள்ள உயர்கோபுர மின் விளக்கை சரிசெய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்போரூர் பேரூராட்சியில் அடங்கிய காலவாக்கம் முதல் ஆலத்துார் ஊராட்சியில் அடங்கிய வெங்கலேரி வரை ஆறுவழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. காலவாக்கத்தில் ஓ.எம்.ஆர்., சாலை மற்றும் ஆறுவழிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள ரவுண்டானாவில் உயர்கோபுர மின்விளக்கு உள்ளது. இவை, கடந்த ஒரு வாரமாக பழுதடைந்துள்ளது. இந்த வழியாக கனரக வாகனங்கள் உட்பட ஏராளாமான வாகனங்கள் கடந்து செல்லும் நிலையில், இரவு நேரத்தில் இப்பகுதி இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், விபத்து மற்றும் குற்றச்சம்பவங்கள் நடைபெறும் சூழலும் உள்ளது. எனவே, வாகன ஓட்டிகளின் நலன் கருதி, ரவுண்டானாவில் உள்ள உயர்கோபுர மின் விளக்கை சரிசெய்ய வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ