உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  மேலமையூரில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு :அகற்றுவதில் நெடுஞ்சாலை துறை மெத்தனம்

 மேலமையூரில் மழைநீர் கால்வாய் ஆக்கிரமிப்பு :அகற்றுவதில் நெடுஞ்சாலை துறை மெத்தனம்

செங்கல்பட்டு: மேலமையூரில், மழைநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, கோரிக்கை எழுந்துள்ளது. செங்கல்பட்டு - திருக்கழுக்குன்றம் வரை, நெடுஞ்சாலை துறை சாலைகள் உள்ளன. இச்சாலையின் இருபுறமும், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மழைநீர் கால்வாய் கட்டப்பட்டது. இந்நிலையில், செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் ஊராட்சியிலிருந்து, நென்மேலி வரை சாலையின் இருபுறமும் உள்ள மழைநீர் கால்வாய்களை ஆக்கிரமித்து, கடைகள் கட்டப்பட்டு உள்ளன. இங்குள்ள கடைக்கு வரும் வாடிக்கையாளர்கள், தங்களின் வாகனங்களை சாலையில் நிறுத்துவதால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. அத்துடன், மழைக்காலங்களில் மழைநீர் கால்வாயில் செல்ல வழியில்லாமல், சாலையில் தேங்கி பாதிப்பு ஏற்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மழைநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென, நெடுஞ்சாலை துறை மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம், சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தினர். ஆனால், நடவடிக்கை எடுக்காமல், அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். மேற்கண்ட சாலையில் வாகனங்கள் நிறுத்த அனுமதியில்லை என, போலீசார் எச்சரிக்கை பலகைகள் வைத்துள்ளனர். இந்த அறிவிப்பை மீறி, சாலையிலேயே வாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. எனவே, பொதுமக்கள் நலன் கருதி, மழைநீர் கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலையில் இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுக்கவும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ