மேலும் செய்திகள்
பைக் மீது அரசு பஸ் மோதி வாலிபர் பலி
31-Oct-2025
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே, பாலாற்று பாலத்தில், பைக் மீது டிப்பர் லாரி மோதி, ஊர்க்காவல் படை வீரர் உயிரிழந்தார். செங்கல்பட்டு மாவட்டம், மெய்யூர் அடுத்த ஆத்தியூர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை, 38. இவர் செங்கல்பட்டில், ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். நேற்று மாலை செங்கல்பட்டில் இருந்து, தன் இரு குழந்தைகளுடன்,'பஜாஜ் விக்ராந்த்' பைக்கில் வீட்டிற்குச் சென்றார். ஜி.எஸ்.டி., சாலை பாலாற்று பாலத்தில் சென்ற போது, பின்னால் வந்த டிப்பர் லாரி கட்டுப்பாட்டை இழந்து, ஏழுமலையின் பைக்கில் மோதியது. இதில், ஏழுமலை படுகாயமடைந்தார்; குழந்தைகள் இருவரும் சிறு காயங்களுடன் தப்பினர். அங்கிருந்தோர் அவரை மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலமாக, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி, ஏழுமலை உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து படாளம் போலீசார் வழக்கு பதிந்து, டிப்பர் லாரி ஓட்டுநரிடம் விசாரித்து வருகின்றனர்.
31-Oct-2025