மேலும் செய்திகள்
இறைச்சி கடையை அகற்ற வேண்டும்
26-Aug-2025
திருப்போரூர்:ஞாயிறு விடுமுறையையொட்டி, திருப்போரூர் மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சி கடைகளில், அசைவ பிரியர்கள் கூட்டம் அதிகரித்தது. திருப்போரூர் பேரூராட்சி சார்ந்து, மீன் அங்காடி செயல்படுகிறது. இந்த மீன் அங்காடியை, பேரூராட்சி நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்கு மீன், கருவாடு, நண்டு, இறால் உள்ளிட்டவை விற்பனைக்காக, 20க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. மேலும், இதன் அருகே உள்ள கட்டடத்தில் ஆடு, கோழி இறைச்சி கடைகளும் உள்ளன. இந்த அங்காடியில், சுற்றுவட்டார பகுதி மக்கள் மீன் வாங்குவதற்காக வந்து செல்கின்றனர். அதன்படி, நேற்று ஞாயிறு விடுமுறையையொட்டி, பொதுமக்கள் மீன், ஆடு மற்றும் கோழி இறைச்சி வாங்க குவிந்திருந்தனர். இதனால், மீன் மற்றும் இறைச்சி கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. மேலும், மீன் விலை அதிகரித்து காணப்பட்டது.
26-Aug-2025