உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / டாஸ்மாக்கில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு

டாஸ்மாக்கில் தகராறு வாலிபர் மண்டை உடைப்பு

பெரும்பாக்கம், - மேடவாக்கம் அடுத்த, சித்தாலப்பாக்கம், காரணை பிரதான சாலையைச் சேர்ந்தவர் பிரகாஷ், 28; ஆட்டோ ஓட்டுனர்.இவரது நண்பர்கள், அதே பகுதி முத்தமிழ் நகரைச் சேர்ந்த ஆனந்தராஜ், 35, மற்றும் மயிலாடுதுறை மேட்டு தெருவைச் சேர்ந்த வெற்றிவேல், 32.நேற்று முன்தினம் இரவு 9:00 மணிக்கு, நண்பர்கள் மூவரும் சித்தாலப்பாக்கம், தனியார் மருத்துவமனை எதிரே, அரசு 'டாஸ்மாக்' கடையில் மது அருந்தினர்.மது போதையில் ஆனந்தராஜ், வெற்றிவேல் ஆகியோருடன் பிரகாஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதில் கோபமடைந்த அவர்கள், சாலையில் கிடந்த கல்லை எடுத்து, பிரகாஷின் தலையில் ஓங்கி அடித்துள்ளனர்.இதில் பிரகாஷின் மண்டை மற்றும் மூக்கில் பலத்த காயம் ஏற்பட்டது. அருகிலிருந்தோர் எதிரே இருந்த தனியார் மருத்துவமனையில், பிரகாஷை சேர்த்தனர். அவருக்கு தலையில் நான்கு தையல் போடப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது.பிரகாஷ் புகாரின்படி வழக்கு பதிந்த பெரும்பாக்கம் போலீசார், ஆனந்தராஜ், வெற்றிவேலை கைது செய்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை