மேலும் செய்திகள்
இந்திய நாட்டிய விழா மாமல்லையில் இன்று துவக்கம்
22-Dec-2024
மாமல்லபுரம்:மாமல்லபுரத்தில் நடைபெற்று வந்த இந்திய நாட்டிய விழா, இன்றுடன் நிறைவுபெறுகிறது.மாமல்லபுரத்தில், சர்வதேச பயணியர் சுற்றுலா களைகட்டுகிறது. இங்கு அதிக அளவில் குவியும் சுற்றுலா பயணியர், இந்திய பாரம்பரிய, கிராமிய கலைகளை ரசிக்க, ஆர்வம் காட்டுகின்றனர். இவர்களுக்காக தமிழக சுற்றுலாத்துறை, இங்கு ஆண்டுதோறும் இந்திய நாட்டிய விழாவை நடத்துகிறது.இவ்விழா, கடந்த டிச., 22ம் தேதி துவக்கி, இன்றுடன் முடிவடைகிறது.தினமும் மாலை, பரதம், குச்சிப்புடி, கதகளி, ஒடிசி உள்ளிட்ட பாரம்பரிய நாட்டியங்கள், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, தெருக்கூத்து உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சிகள் என, கலைஞர்கள் நிகழ்த்தினர்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவை முன்னிட்டு, தமிழக அரசு ஒரு வாரம் துக்கம் கடைபிடித்து, டிச., 27ம் தேதி முதல், ஜன., 1ம் தேதி வரை, விழா ரத்து செய்யப்பட்டது.ஜன., 2ம் தேதி மீண்டும் துவக்கப்பட்டது.ரத்தான ஒரு வார கலை நிகழ்ச்சிகளும் இடம்பெறும் வகையில், நிகழ்ச்சி நேரத்தை அதிகரித்து, கூடுதல் நிகழ்ச்சிகள் நடத்தி ஈடு செய்யப்பட்டன. இன்றுடன் 75க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள் நிகழ்த்தப்பட்டு, விழா நிறைவு பெறுகிறது.
22-Dec-2024