மேலும் செய்திகள்
திருமுக்கூடல் அரசு பள்ளி தரம் உயர்த்த கோரிக்கை
25-Oct-2024
திருப்போரூர்:திருப்போரூரில் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்படுகிறது. இப்பள்ளிகளில், பல்வேறு கிராமங்களை சேர்ந்த, 3,000க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் படிக்கின்றனர்.திருப்போரூர்- - செங்கல்பட்டு தடத்தில் இயக்கப்படும் அரசு பேருந்துகள் வாயிலாக, பள்ளி மாணவ - மாணவியர், ஆசிரியர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் சென்று வருகின்றனர்.இவ்வழியே காலை, மாலை நேரங்களில், குறைவான அரசு பேருந்துகளே இயக்கப்படுவதாக, மாணவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.மாலையில், பேருந்து நிலையத்திருந்து புறப்படும்போதே அப்பகுதிவாசிகள், மாணவர்கள் ஏறியபின் கூட்டம் அதிகரித்து, பேருந்தில் இடமில்லாத நிலை ஏற்படுகிறது.மற்ற மாணவ - மாணவியர்கள் அடுத்த பேருந்திற்கு காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகிறது. சில மாணவர்கள், குறித்த நேரத்திற்குள் வீடு திரும்புவதற்காக, படிக்கட்டில் தொங்கியபடி ஆபத்தான நிலையில் பயணம் செய்கின்றனர்.எனவே, மாவட்ட நிர்வாகம் தலையிட்டு, காலை மற்றும் மாலை நேரங்களில், திருப்போரூர் - செங்கல்பட்டு தடத்தில், கூடுதல் பேருந்துகள் இயக்க தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, மாணவர்கள், அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
25-Oct-2024