சிமென்ட் சாலை அமைக்க கடப்பேரியில் வலியுறுத்தல்
மதுராந்தகம்: மதுராந்தகம் நகராட்சி, 24 வார்டுகளை உள்ளடக்கியது. அதில், 19வது வார்டு, கடப்பேரி பகுதியில், குருக்கள் தெரு உள்ளது. கடந்த, 2011ல், குருக்கள் தெருவில் சிமென்ட் சாலை போடப்பட்டது.இந்த சிமென்ட் சாலை, மதுராந்தகம் தீயணைப்பு நிலையம் மற்றும் ரயில் நிலையத்திற்கு செல்லும் மிக முக்கிய சாலையாகும்.இச்சாலையை, பகுதி குடியிருப்புவாசிகள், ரயில் நிலையத்திற்கு செல்லும் நுாற்றுக்கணக்கான இருசக்கர வாகன ஓட்டிகள், அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.தற்போது, சில மாதங்களாக, சிமென்ட் சாலையில் ஜல்லிக்கற்கள் பெயர்ந்துள்ளதால், இருசக்கர வாகன ஓட்டிகள் கீழே விழுந்து பாதிக்கப்படுகின்றனர்.மேலும், சாலையில் ஆங்காங்கே குண்டும், குழியுமாக பள்ளம் ஏற்பட்டு, தண்ணீர் தேங்கி நிற்கிறது. அதனால், அவசர காலத்திற்கு தீயணைப்பு வாகனம் செல்வதில் சிரமமாக உள்ளது.சாலை அமைத்து, 13 ஆண்டுகள் கடந்த பின்னும், தற்போது வரை புதிதாக சிமென்ட் சாலை அமைக்கப்படவில்லை.எனவே, நகராட்சி அதிகாரிகள் சாலையை ஆய்வு செய்து, புதிதாக சிமென்ட் சாலை அமைக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, இரு சக்கர வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.