கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சியில், படுமோசமான நிலையில் உள்ள உட்புற சாலைகளை சீரமைக்க வேண்டுமென, பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பே டு ஊராட்சி, 114.5 ஹெக்டேர் பரப்பில் உள்ளது. இங்கு 9 வார்டுகளில், 3,500 வீடுகளில், 15,000க்கும் மேற்பட்ட நபர்கள் வசித்து வருகின்றனர். அங்கு, 192 தெருக்களில், 500க்கும் மேற்பட்ட உட்புற சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில், 60 சதவீதம் நடக்க லாயக்கற்ற நிலையில் உள்ளதால், பகு தி மக்கள் அவதி யடைந் து வருகின்றனர். பகுதி மக்கள் கூறிய தாவது: மக்களால் தினமும் பயன்படுத்தப்படும் உட்புற சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளன. சாலையில் மழை நீர் தேங்கி, நடக்கவே லாயக்கற்ற நிலையில் உள்ளதால், குழந்தைகள், பெண்கள், முதியோர் சிரமத்தை எதிர்கொள்கின்றனர். சாலையில் தேங்கும் மழை நீரால், கொசு உற்பத்தி மிகுதியாகி, சுகாதார சீர்கேட்டிற்கு வழி வகுக்கிறது. சாலையில் உள்ள பள்ளங்களில், இரு சக்கர வாகன ஓட்டிகள், நிலை தடுமாறி விபத்தை சந்திப்பதும், காயமடைவதும் அடிக்கடி நிகழ்கிறது. மோசமாக உள்ள உட்புற சாலைகளை புனரமைக்கும்படி, ஊராட்சி நிர்வாகத்திடம் பலமுறை கோரிக்கை வைத்தும், நிதியில்லை என, கைவிரித்தது. எனவே, மாவட்ட, ஒன்றிய நிர்வாகம் சார்பில், போதுமான நிதி ஒதுக்கி, காயரம்பேடு உட்புற சாலைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.