மேலும் செய்திகள்
ஒயர் திருடிய மூவர் கைது
22-Sep-2024
மறைமலை நகர்:சிங்கபெருமாள் கோவில் அடுத்த வளையகரணை கிராமத்தை சேர்ந்தவர் அர்ஜுன், 58. பாரத் நெட்வொர்க் என்ற நிறுவனத்தில், மேற்பார்வையாளராக பணிபுரிந்து வருகிறார்.நேற்று முன்தினம், பரனுார் ஊராட்சி அலுவலகம் அருகில், இணையதள கேபிள் ஒயர்கள் அமைக்கும் பணியில், ஊழியர்களுடன் ஈடுபட்டு இருந்தார்.அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள், இணையதள கேபிள் ஒயர்களை திருடிச் சென்றுள்ளனர்.இது குறித்து, செங்கல்பட்டு தாலுகா காவல் நிலையத்தில், அர்ஜுன் புகார் அளித்தார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
22-Sep-2024