உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / இரவில் தெரியாத தடுப்பு சுவர் திருக்கச்சூரில் விபத்து அபாயம்

இரவில் தெரியாத தடுப்பு சுவர் திருக்கச்சூரில் விபத்து அபாயம்

மறைமலைநகர்:சிங்கபெருமாள் கோவில் --- ஸ்ரீபெரும்புதுார் மாநில நெடுஞ்சாலையை திருக்கச்சூர், தெள்ளிமேடு, கொளத்துார், ஆப்பூர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் கனரக வாகனங்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலையில் திருக்கச்சூர் பகுதியில் மேம்பால பணிகள் நடைபெற்று வரும் பகுதியில், ஆறு வழிச்சாலை இரண்டு வழியாக குறுகலாக செல்லும் பகுதியில், தடுப்பு சுவர் அமைந்துள்ளது.இந்த சுவர் இரவு நேரங்களில் தெரியாததால், வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலையில் திருக்கச்சூர் பகுதியில், இரவு நேரங்களில் விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து காணப்படுகிறது.இதனால் தடுப்பு சுவர் உள்ளது வாகன ஓட்டிகளுக்கு தெரியாத நிலை உள்ளது. புதிதாக வரும் வாகன ஓட்டிகள் தடுப்பு சுவர் இருப்பது தெரியாமல், தடுமாறி விபத்தில் சிக்கி வருகின்றனர்.நேற்று முன்தினம் அதிகாலை கார் ஒன்று விபத்தில் சிக்கி சேதமடைந்தது. நல்வாய்ப்பாக அதில் இருந்தவர்கள் காயமின்றி தப்பினர்.எனவே, பெரும் விபத்து மற்றும் உயிர் பலி ஏதும் ஏற்படும் முன், இந்த பகுதியில் இரவில் ஒளிரும் பட்டைகள் அமைக்கவும், எரியாத விளக்குகளை சரி செய்யவும், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை