விரைவு ரயிலில் பயணி தவறவிட்ட ரூ.14 லட்சம் பொருட்கள் மீட்பு
சென்னை: எழும்பூர் ரயில் நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று காலை தொடர்பு கொண்ட, ராமநாதபுரத்தைச் சேர்ந்த கார்த்திக் என்ற பயணி, 'ராமேஸ்வரத்தில் இருந்து பஞ்சாப் மாநிலம் பிரோஸ்பூர் செல்லும், ஹம்சபார் விரைவு ரயிலில், தன் உடைமைகளை தவறவிட்டதாக' தகவல் தெரிவித் தார். தகவலின் படி, பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த எஸ்.ஐ., கணேஷ் தலைமையிலான அதிகாரிகள், ரயிலில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஹம்சபார் விரைவு ரயிலில், பை ஒன்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பையை மீட்ட அதிகாரிகள், வணிகத்துறை துணை நிலை மேலாளரிடம் அதை ஒப்படைத்தனர். பையில், 10 சவரன் நகைகள், ஐ போன் - 7, ஐ போன் - 13 ப்ரோ மே க்ஸ், ஆப்பிள் மடிக்கணினி உள்ளிட்ட, 14 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் இருந்தன. ஆவணங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ரயில்வே பாதுகாப்பு படையி னர், பையை கார்த்திக்கிடம் ஒப்படைத்தனர்.