உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஜானகிபுரம் கிராமத்தினர்

 பட்டா கோரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட ஜானகிபுரம் கிராமத்தினர்

மதுராந்தகம்: ஜானகிபுரம் கிராமத்தில், 20 ஆண்டுகளுக்கும் மேலாக வசித்து வரும் மக்கள், இலவச வீட்டுமனை பட்டா வழங்க கோரி, மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் ஒன்றியத்திற்கு உட்பட்ட, ஜானகிபுரத்தில், அரசுக்குச் சொந்தமான இடத்தில் கடந்த 20 ஆண்டுகளாக, 60க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் வசித்து வரும் குடும்பங்களுக்கு மின் இணைப்பும், இலவச பட்டாவும் வழங்கப்படாமல் உள்ளது. இது குறித்து பலமுறை, துறை சார்ந்த அதிகாரிகளிடம் மனு கொடுத்தும், இதுவரை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் நேற்று, 100க்கும் மேற்பட்ட பெண்கள், மதுராந்தகம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பின், மதுராந்தகம் வட்டாட்சியர் பாலாஜியிடம் மனு அளித்தனர். 'பட்டா வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும்' என, வட்டாட்சியர் அளித்த உத்தரவின்படி, அனைவரும் கலைந்து சென்றனர். ஜானகிபுரம் பகுதியில் வசித்து வரும் எங்களுக்கு, மின் இணைப்பு இல்லாததால், இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் வீடுகளுக்குள் வருகின்றன. பிள்ளைகள் படிப்பதற்கு மின்சாரம் இல்லாமல், மண்ணெண்ணெய் விளக்கு, மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் படித்து வருகின்றனர். இதனால், கிராமத்தில் வசிக்கும் திருமண வயதில் உள்ள ஆண்களுக்கு, திருமணத்திற்கு பெண் கொடுக்க மற்ற கிராமத்தினர் மறுக்கின்றனர். அரசு உடனடியாக இலவச பட்டா வழங்கவும், மின் இணைப்பு வழங்கவும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் கூறினர். ஜானகிபுரம் கிராமத்தினர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்