உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ரிசர்வ் வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் மாயம்

ரிசர்வ் வங்கி ஊழியர் வீட்டில் நகைகள் மாயம்

ஓட்டேரி:ரிசர்வ் வங்கியில் கிளார்க்காக பணியாற்றி ஓய்வு பெற்றவர், மேரி ப்ளாரன்ஸ் சேவியர், 76. இவர், பெரம்பூர் ஜமாலியாவில் உள்ள வசந்த் அப்பார்ட்மென்டில் தனியாக வசித்து வருகிறார். ஏஜன்ட் மூலமாக வீட்டு வேலைக்கு, பாரதி என்ற பெண்ணை பணியமர்த்தியுள்ளார்.சில நாட்கள் வேலை செய்த பாரதி, பின் பணியில் இருந்து நிறுத்தப்பட்டார். இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் இருந்த நகைகளை தேடியபோது மாயமானது தெரிய வந்தது. இதில், 6 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க வளையல், வைர கம்மல், மோதிரம், டாலர், தங்க கைகடிகாரம் உள்ளிட்டவை மாயமாகி உள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஓட்டேரி போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை