உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / கந்த சுவாமி கோவிலில் சஷ்டி வழிபாடு

கந்த சுவாமி கோவிலில் சஷ்டி வழிபாடு

திருப்போரூர்,திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் சஷ்டியை முன்னிட்டு, சிறப்பு பூஜைகள் நேற்று நடந்தன.முருகனுக்கு உகந்த நாளான செவ்வாய்க்கிழமையுடன் சஷ்டி வந்ததால், இக்கோவிலில் காலை முதலே, பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.அலகு குத்துதல், மொட்டை அடித்தல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் நிறைவேற்றினர். கோவில் வட்ட மண்டபத்தைச் சுற்றிலும் அமர்ந்து, அகல் விளக்கேற்றியும் பக்தர்கள் வழிபட்டனர். அதேபோல் நெல்லிக்குப்பம், கேளம்பாக்கம், காட்டூர் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள முருகன் கோவில்களிலும் சிறப்பு வழிபாடு மற்றும் பூஜைகள் நடந்தன.இதில், அந்தந்த பகுதி பக்தர்கள் பங்கேற்று, கந்த சஷ்டி கவசம் பாடி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை