மேலும் செய்திகள்
கந்தசுவாமி கோவிலில் கந்த சஷ்டி 2ம் நாள் உத்சவம்
24-Oct-2025
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், இந்தாண்டு மஹா கந்த சஷ்டி வைபவம், கடந்த 22ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் கந்தபெருமான் வள்ளி, தெய்வானையுடன் வீதி உலா வைபவம், காலை மற்றும் இரவு நேரங்களில் நடந்தது. பிரதான சூரசம்ஹார விழா, நேற்று முன்தினம் விமரிசையாக நடைபெற்றது. இதையடுத்து, நேற்று இரவு 7:00 மணிக்கு, கந்த பெருமான் -தெய்வானையை மணம் முடிக்கும் திருக்கல்யாணம் உத்சவம் விமரிசையாக நடந்தது. பக்தர்கள் சீர்வரிசைகளுடன் உத்சவ மண்டபத்தில் குவிந்திருந்தனர். திருக்கல்யாண வைபவத்திற்குப் பின், வளையல், பூ மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த திருக்கல்யாண வைபவம் நடந்ததை தொடர்ந்து, சஷ்டி விழா நிறைவடைந்தது. பூதத்தாழ்வார் உலா ஆழ்வார்களில் ஒருவரான பூதத்தாழ்வார், மாமல்லபுரத்தில் ஸ்தலசயன பெருமாள் கோவிலில், தனி சன்னிதியில் வீற்று, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். இக்கோவிலில் ஆண்டுதோறும் 10 நாட்கள் நடைபெறும் அவரது ஜெயந்தி உத்சவம், கடந்த 22ம் தேதி துவங்கியது. அன்று முதல் தினமும் திருமஞ்சனத்துடன் சேவையாற்றி, மாலை மாடவீதிகளில் உலா செல்கிறார். நாளை காலை 5:30 முதல் 6:30 மணிக்குள், திருத்தேரில் பூதத்தாழ்வார் எழுந்தருளுகிறார். காலை 8:00 மணிக்கு, பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க, தேரில் உலா செல்கிறார். ஜெயந்தி நாளான நாளை மறுநாள் காலை திருமஞ்சனத்தைத் தொடர்ந்து, ரத்னாங்கி சேவை, மாலை அவதார வளாக நந்தவன திருமஞ்சனம் காண்கிறார்.
24-Oct-2025