உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உப்பு குடிநீரால் சிறுநீரக பிரச்னை வீரபோகம் ஊராட்சியில் வேதனை

உப்பு குடிநீரால் சிறுநீரக பிரச்னை வீரபோகம் ஊராட்சியில் வேதனை

பவுஞ்சூர்:வீரபோகம் ஊராட்சியில் குடிநீரில் உப்புத்தன்மை அதிக அளவில் இருப்பதால், கிராம மக்கள் சிறுநீரக பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், பவுஞ்சூர் அடுத்த வீரபோகம் ஊராட்சியில் பாக்கூர், வீரபோகம், பூஞ்சேரி, மணல்மேடு உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன.இப்பகுதிகளில், 700க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். பாக்கூர் ஏரிக்கரையில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளைக் கிணறு மூலமாக பூஞ்சேரி, மணல்மேடு மற்றும் பாக்கூர் ஆகிய கிராமங்களில் உள்ள மூன்று மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளுக்கு தண்ணீர் ஏற்றப்பட்டு, இப்பகுதி மக்களுக்கு தினமும் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் நிலத்தடி நீரில் உப்புத்தன்மை அதிக அளவில் இருப்பதால், 10க்கும் மேற்பட்டோர் சிறுநீரக பிரச்னையால் பாதிக்கப்பட்டு,'டயாலிசிஸ்' சிகிச்சை பெற்று வருகின்றனர். ஏற்கனவே, 15 பேர் குடிநீர் பிரச்னையால், சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறப்படுகிறது. எனவே, வீரபோகம் ஊராட்சியில் புதிதாக குடிநீர் கிணறு அமைத்து, சுத்திகரிப்பு நிலையம் மூலமாக குடிநீரை துாய்மைப்படுத்தி வழங்க வேண்டுமென, கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை