உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / வித்யாசாகர் பள்ளியில் மழலையருக்கு பட்டம்

வித்யாசாகர் பள்ளியில் மழலையருக்கு பட்டம்

வித்யாசாகர் பள்ளியில் மழலையருக்கு பட்டம் செங்கல்பட்டு, செங்கல்பட்டு வித்யாசாகர் குளோபல் பள்ளியின் 17வது மழலையர் பட்டமளிப்பு விழா, வித்யாசாகர் கல்வி குழும தாளாளர் விகாஸ் சுரானா தலைமையில் நடந்தது. இதில், பி.என்,ஐ., நிறுவன நிர்வாக இயக்குனர் ராகவ் கவுசிக் பங்கேற்று, மழலையர்களுக்கு பட்டங்கள் வழங்கினார். பள்ளி முதல்வர் கோவிந்தராஜ் முன்னிலை வகித்தார். இந்த விழாவில், மழலையர்களின் பாடல்களும், நடன நிகழ்ச்சிகளும் நடந்தன. அதன் பின், மாணவர்களுக்கு சான்றிதழ், கேடயங்கள் வழங்கப்பட்டன. இதில் ஆசிரியர்கள், பெற்றோர் மற்றும் மாணவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை