மேலும் செய்திகள்
மாநில வாலிபால் போட்டியில் ஜேப்பியார் 'சாம்பியன்'
30-Sep-2024
சென்னை : ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள கொங்கு பொறியியல் கல்லுாரி சார்பில், கொங்கு கோப்பைக்கான வாலிபால் போட்டி, கடந்த 26ம் தேதி துவங்கி, நேற்று முன்தினம் நடந்தது.இதில், பெண்கள் பிரிவில், தமிழகத்தின் 40க்கும் மேற்பட்ட கல்லுாரி அணிகள் பங்கேற்றன. போட்டியின் துவக்கம் முதலே சிறப்பான ஆட்டத்தை ஜேப்பியார் பல்கலை அணி வீராங்கனையர் வெளிப்படுத்தினர். முதல் ஆட்டத்தில் சக்தி கைலாஷ் கல்லுாரியை 25 - -19, 25 - -22, 25- - 17 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர். அடுத்த சுற்றில் ஜமால் கல்லுாரி அணியை, 25 - -7, 25 - -5, 25 - -14 என்ற புள்ளிக் கணக்கில் வென்றனர்.பரபரப்பான இறுதி லீக் சுற்று ஆட்டத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜேப்பியார் வீராங்கனையர், 25- - 19, 25- - 23, 26 - -24 என்ற புள்ளிக் கணக்கில், பி.கே.ஆர்., கல்லுாரி அணியை வீழ்த்தி, சாம்பியன் பட்டம் வென்றனர்.
30-Sep-2024