மேலும் செய்திகள்
சாலை விபத்தில் முதியவர் பலி
20-Dec-2024
மறைமலை நகர்:செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த கிணார் கிராமத்தைச் சேர்ந்த கிருஷ்ணன் என்பவரது மகன் சங்கர்,50; கூலித்தொழிலாளி.இவர் நேற்று காலை, தன் 'டி.வி.எஸ்., ஜூபிட்டர்' ஸ்கூட்டரில், ஹெல்மெட் அணிந்து, கூடுவாஞ்சேரிக்கு பணிக்கு சென்றார். திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், மகேந்திரா சிட்டி பேருந்து நிலையம் அருகே சென்ற போது, பின்னால் வந்த தனியார் கல்லுாரி பேருந்து, சங்கரின் ஸ்கூட்டரில் மோதி, அவரது தலையில் ஏறி இறங்கியது.இதில், சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தாம்பரம் போக்குவரத்து புலனாய்வு போலீசார், சங்கரின் உடலை மீட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து, தப்பிச் சென்ற தனியார் கல்லுாரி பேருந்து ஓட்டுனரை தேடி வருகின்றனர்.
20-Dec-2024