உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  கூடுவாஞ்சேரி அரசு பள்ளியில் மடிக்கணினிகள் ஆட்டை

 கூடுவாஞ்சேரி அரசு பள்ளியில் மடிக்கணினிகள் ஆட்டை

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில், அலுவலக அறைக்குள் வைக்கப்பட்டிருந்த மடிக்கணினிகள், ஒலிப்பெருக்கி ஆகியவற்றை திருடிச் சென்ற மர்ம நபர்களை, போலீசார் தேடி வருகின்றனர். கூடுவாஞ்சேரி, நெல்லிக்குப்பம் சாலையில், அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளி அலுவலக அறையிலுள்ள பீரோவில், இரண்டு மடிக்கணினிகள் மற்றும் அதற்கான ஒலிப்பெருக்கி பெட்டிகள் வைக்கப்பட்டிருந்தன. 'டிட்வா' புயல் காரணமாக கடந்த 2, 3 ஆகிய தேதிகளில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் பள்ளி திறக்கப்பட்ட நிலையில், அலுவலக அறையின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப் பட்டிருந்த இரு மடிக் கணினிகள், ஒலிப் பெருக்கிகள் திருடப் பட்டது தெரிந்தது. இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின்படி, கூடுவாஞ்சேரி போலீசார் வழக்கு பதிவு செய்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ