உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / எல்.எண்டத்துார் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

எல்.எண்டத்துார் அரசு பள்ளி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு

மதுராந்தகம்:மதுராந்தகம் அடுத்த எல்.எண்டத்துார் அரசினர் மேல்நிலைப் பள்ளியில், 1974-75ல், 10ம் வகுப்பு படித்த முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது.இதில் பங்கேற்ற முன்னாள் மாணவர்கள், தங்களது பள்ளி படிப்பிற்குப் பின், தாங்கள் கடந்து வந்த பாதை, பணி, தொழில் விபரம், குடும்ப சூழல் குறித்து பகிர்ந்து கொண்டனர்.தங்களுக்கு பாடம் நடத்திய ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக சால்வை அணிவித்து, தங்களது ஆசிரியர்களிடம் ஆசி பெற்றனர்.கடந்த 50 ஆண்டுகளுக்குப் பின் சந்தித்து உரையாடிய முன்னாள் மாணவர்களும், பாடம் நடத்திய ஆசிரியர்களும் மகிழ்ச்சியில் திளைத்தாலும், நிகழ்ச்சி முடிந்த பின், பிரிய மனமின்றி பிரிந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை