தொழுநோய் கண்டறியும் முகாம் வரும் ஆக., 1ல் துவக்கம்
செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்டத்தில், தொழுநோய் கண்டறியும் முகாம், வரும் ஆக., 1ம் தேதி துவங்குகிறது.செங்கல்பட்டு கலெக்டர் கூட்ட அரங்கில், தொழுநோய் கண்டறியும் முகாமிற்கான மாவட்ட அளவிலான ஒருங்கிணைப்பு கூட்டம் கலெக்டர் சினேகா தலைமையில், நேற்றுமுன்தினம் நடந்தது.இதில், மருத்துவ பணிகள் துணை இயக்குநர் கனிமொழி, மத்திய தொழுநோய் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் இயக்குநர் வீரகுமார், மாவட்ட நலப்பணிகள் இணை இயக்குநர் மலர்விழி, மாவட்ட சுகாதார நல அலுவலர் பானுமதி உட்பட பலர் பங்கேற்றனர்.இந்த கூட்டத்தில், மாவட்டத்தில் வீடு வீடாகச் சென்று தொழுநோய் கண்டறியும் முகாம், முதல் கட்டமாக வரும் ஆக., 1ம் தேதி துவங்கி, 20ம் தேதி வரை, சூணாம்பேடு, மதுராந்தகம், செங்கல்பட்டு, தாம்பரம் ஆகிய இடங்களில் நடக்க உள்ளது.இரண்டாம் கட்டமாக, வரும் அக்., 24ம் தேதி துவங்கி, நவ., 11ம் தேதிவரை, பல்லாவரம், மேற்கு தாம்பரம், சதுரங்கப்பட்டினம் ஆகிய இடங்களில் நடத்தப்படும் என, சுகாதாரத் துறையினர் தெரிவித்தனர்.