செந்தமிழ் நகர ில் ரேஷன் கடை அமைக்க பகுதியினர் கோரிக்கை
மறைமலை நகர், மறைமலை நகர் நகராட்சி, காட்டாங்கொளத்துார் அடுத்த செந்தமிழ் நகர் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதியில் ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள், தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் வசித்து வருகின்றனர்.வளர்ந்து வரும் பகுதி என்பதால் நாளுக்கு நாள் குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. இப்பகுதியில் நியாய விலைக்கடை அருகில் இல்லாததால் அரிசி, சர்க்கரை உள்ளிட்ட பொருட்கள் வாங்க பொது மக்கள் காட்டாங்கொளத்துார், பொத்தேரி உள்ளிட்ட பகுதிகளுக்கு 2 கி.மீ., தூரம் வரை செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. இதன் காரணமாக பெண்கள், முதியவர்கள் பொருள்களை வாங்கி கொண்டு நீண்ட துாரம் சுமந்து வரும் சூழல் ஏற்பட்டு உள்ளது.எனவே இந்த பகுதியில் புதிய கடை அல்லது பகுதி நேர நியாய விலைக் கடை திறக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.