உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாரி -- கார் மோதல் ஒருவர் உயிரிழப்பு

லாரி -- கார் மோதல் ஒருவர் உயிரிழப்பு

மேல்மருவத்துார்:சென்னை, கொடுங்கையூர் முத்தமிழ் நகரைச் சேர்ந்தவர் குகன், 52. நேற்று முன்தினம் இரவு, இவரது நண்பரான அதே பகுதியைச் சேர்ந்த அய்யனார், 54, என்பவரை அழைத்துக் கொண்டு, 'மாருதி வேக்கனார்' காரில், சோத்துப்பாக்கம் -- வந்தவாசி மாநில நெடுஞ்சாலையில், ராமாபுரம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.அப்போது, எதிர்பாராத விதமாக கன்டெய்னர் லாரி, திடீரென பிரேக் பிடித்ததால், பின்னால் சென்ற கார் மோதி விபத்துக்குள்ளானது.இதில், காரை ஓட்டிச் சென்ற குகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து வந்த மேல்மருவத்துார் போலீசார், படுகாயமடைந்த அய்யனாரை மீட்டு, மேல்மருவத்துார் தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து புகாரின்படி வழக்கு வழக்கு பதிந்த போலீசார், தலைமறைவான கன்டெய்னர் லாரி ஓட்டுனரை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை