உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / லாரி - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

லாரி - அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்து

செய்யூர்:பனையூரில், கான்கிரீட் கலவை லாரி மீது, அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. புதுச்சேரியில் இருந்து அரசு பேருந்து, 40 பயணியருடன் சென்னை நோக்கி சென்றது. செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட பனையூர் கிராமத்தில், கிழக்கு கடற்கரை சாலை விரிவாக்கப் பணிக்காக, சாலையோரத்தில் கால்வாய் அமைக்கப்படுகிறது. இந்த கால்வாயில் கான்கிரீட் கலவை கொட்டிக் கொண்டிருந்த லாரியின் மீது, அரசு பேருந்து நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் பயணம் செய்த பயணியர் அனைவரும், காயமின்றி உயிர் தப்பினர். பின், அனைவரும் மாற்றுப் பேருந்தில் அனுப்பி வைக்கப்பட்டனர். திடீரென அரசு பேருந்தில் 'பிரேக்' பழுதானதால், லாரி மீது மோதி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. ஆயிரக்கணக்கான வாகனங்கள் கடந்து செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், விரிவாக்க பணிக்காக ஒருவழிப் பாதையாக மாற்றப்பட்டு வாகனங்கள் கடந்து செல்கின்றன. இந்நிலையில், எந்தவித எச்சரிக்கை பலகையும் வைக்காமல், பல இடங்களில் கட்டுமானப் பணிகள் நடந்து வருகின்றன. இதனால், அடிக்கடி விபத்துகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி