உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / குறைந்த மின் அழுத்தம் பெருந்தண்டலத்தில் அவதி

குறைந்த மின் அழுத்தம் பெருந்தண்டலத்தில் அவதி

செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த பெருந்தண்டலம் கிராமத்தில் 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகள் மற்றும் தெரு விளக்குகளுக்கு செம்பாக்கம் மின் வாரிய அலுவலகத்தில் இருந்து மின் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த கிராமத்தில் அடிக்கடி மின் தடை மற்றும் குறைந்த மின் அழுத்தம் காரணமாக கிராம மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:பெருந்தண்டலம் மட்டுமின்றி வளர்குன்றம், சென்னேரி கிராமங்களில் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின் தடை ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கிரைண்டர், மின்விசறி, மிக்சி போன்ற மின் சாதன பொருட்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.கோடைவெயில் வாட்டி வதைத்து வருவதால் மின் விசிறி பயன்படுத்த முடியாததால் முதியவர்கள், குழந்தைகளுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. மேலும் ஊராட்சி சார்பில் அமைக்கப்பட்டு உள்ள மின் மோட்டார்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.இது குறித்து மின்வாரிய அலுவலகம் மற்றும் அதிகாரிகளுக்கு பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.எனவே குறைந்த மின் அழுத்தம் மற்றும் மின் தடை பிரச்சினைகளுக்கு தீர்வு காண, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ