மேலும் செய்திகள்
செல்லியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
07-Oct-2025
மேல்மருவத்துார்: மேல்மருவத்துார் அருகே சோத்துப்பாக்கம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா, நடந்தது. சோத்துப்பாக்கம், மாரியம்மன் கோவிலில், கடந்த சில ஆண்டுகளாக, கோவில் புனரமைப்பு பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது பணிகள் நிறைவுற்று, கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நேற்று முன்தினம் வேள்வி பூஜையுடன் துவங்கி, யாகசாலையில் கலசங்கள் வைத்து, கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், பூர்ணாஹீதி, விநாயகர் பூஜை உள்ளிட்ட, நான்கு கால பூஜைகள் நடைபெற்றன. நேற்று, காலை 9:30 மணியளவில், யாகசாலையில் இருந்து கலசம் புறப்பட்டு, கோவிலை வந்தடைந்தது. பின், காலை 10:00 மணியளவில், வேத மந்திரங்கள் முழங்க, நாதஸ்வரம் ஒலிக்க, மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீட ஆன்மிக மக்கள் தொண்டு இயக்க தலைவர் கோ.ப.அன்பழகன், கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின், உற்சவர் சிலைக்கும் புனித நீர் ஊற்றி, மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், சுற்று வட்டார பகுதி கிராம மக்கள் பங்கேற்று, மாரியம்மனை வழிபட்டனர். அனைவருக்கும் பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இன்று முதல், 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெறும்.
07-Oct-2025