கள்ளச்சந்தையில் மது விற்றவர் கைது
அச்சிறுபாக்கம்:மதுராந்தகத்தில், கள்ளச்சந்தையில் மதுவிற்ற பெண்ணை, அச்சிறுபாக்கம் மதுவிலக்கு போலீசார் கைது செய்தனர்.-மதுராந்தகம் நகராட்சி, காந்தி நகர் லுார்துபுரம் பகுதியைச் சேர்ந்த பாஸ்கர் என்பவரது மனைவி சிந்துஜா, 26.இவர், வீட்டின் அருகில் சட்ட விரோதமாக மது பாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, அச்சிறுபாக்கத்தில் உள்ள மதுவிலக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.இதைத்தொடர்ந்து, அப்பகுதியில் போலீசார் சோதனை மேற்கொண்டனர். அப்போது, விற்பனைக்காக வைத்திருந்த, 180 மி.லி., அளவு கொண்ட, 31 மது பாட்டில்கள் சிக்கின. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், சிந்துஜாவை கைது செய்தனர்.