கஞ்சா விற்பனைக்கு ஆர்டர் எடுத்தவர் கைது
கூடுவாஞ்சேரி:கூடுவாஞ்சேரி அடுத்த தைலாவரம், வள்ளலார் நகர், ராஜிவ்காந்தி நகரைச் சேர்ந்தவர் ராஜதுரை, 21. இவர் அடிதடி, வழிப்பறி, கஞ்சா விற்பனை வழக்குகளில் சிறை சென்று, ஜாமினில் வெளிவந்தார்.இந்நிலையில், கூடுவாஞ்சேரி சுற்றுப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்யும் நோக்கில், அப்பகுதியில் உள்ள கூலி தொழிலாளிகள், கல்லுாரி மாணவர்களிடம், முன்கூட்டியே ராஜதுரை 'ஆர்டர்' எடுத்துள்ளார்.இதுகுறித்து, கூடுவாஞ்சேரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் தேடுவதை அறிந்து, ராஜதுரை தலைமறைவானார்.இந்நிலையில், தைலாவரம் அருகே புதர் காட்டில் ராஜதுரை மறைந்திருப்பதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது.நேற்று முன்தினம் காலை அப்பகுதியை சுற்றிவளைத்த போலீசார், ராஜதுரையை கைது செய்தனர்.பின், அவர் மீது வழக்கு பதிவு செய்து, செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று முன்தினம் மாலை சிறையில் அடைத்தனர்.