உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  இளம்பெண் பலாத்காரம் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

 இளம்பெண் பலாத்காரம் வாலிபருக்கு 7 ஆண்டு சிறை

செங்கல்பட்டு: இளம்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில், வாலிபருக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அச்சிறுபாக்கம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம்பெண்ணை, 2019ம் ஆண்டு, அச்சிறுபாக்கம் அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்த கருணைவேல், 28, என்பவர், பாலியல் பலாத்காரம் செய்தார். இதுகுறித்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் அளித்த புகாரை அடுத்து, மேல்மருவத்துார் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து, கருணைவேலை கைது செய்து சிறையில் அடைத்தனர். இவ்வழக்கு விசாரணை, செங்கல்பட்டு மகிளா நீதிமன்றத்தில், நீதிபதி எழிலரசி முன்னிலையில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை முடிந்து, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதால், கருணைவேலுக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும், 4,000 ரூபாய் அபராதமும், கட்டத் தவறினால் மூன்று மாதங்கள் மெய்க்காவல் தண்டனையும் விதித்து, நீதிபதி எழிலரசி நேற்று முன்தினம் தீர்ப்பளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை