உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் திக்... திக்

சாலையில் மெகா பள்ளம் வாகன ஓட்டிகள் திக்... திக்

திருப்போரூர்:செம்பாக்கம்- - மேடவாக்கம் நெடுஞ்சாலை இடையே, திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய காயார் ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு, 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள பிரதான சாலை சேதமடைந்து திடீர் பள்ளம் ஏற்பட்டுள்ளது.பள்ளம் இருப்பதை அறியாமல், இந்த வழியாக நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கி காயமடைந்து வருகின்றனர்.மேலும், இங்கு முறையான கழிவுநீர் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளிலிருந்து வெளியேறும் கழிவுநீர் சாலையில் வழிந்தோடி பள்ளத்தில் தேங்கி, துர்நாற்றம் வீசுவதோடு சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. இதனால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.எனவே, நெடுஞ்சாலை துறையினர் ஆய்வு செய்து, சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தை சரிசெய்யவும், கால்வாய் அமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி