உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / அடிப்படை வசதிகள் இல்லை மேலமையூர்வாசிகள் தவிப்பு

அடிப்படை வசதிகள் இல்லை மேலமையூர்வாசிகள் தவிப்பு

மறைமலை நகர்,காட்டாங்கொளத்துார் ஒன்றியம், மேலமையூர் முதல்நிலை ஊராட்சியில் ராம கிருஷ்ணா நகர், ஆண்டாள் நகர், நியூ காலனி, பவானி நகர், கந்தவேல்நகர் உள்ளிட்ட ஒன்பது வார்டுகள் உள்ளன.இதில் 11,000க்கும் மேற்பட்ட வாக்காளர்கள் உள்ளனர். வெளிமாவட்டங்களைச் சேர்ந்தோர் இங்கு தங்கி, மகேந்திரா சிட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளில் பணிபுரிந்து வருகின்றனர்.இந்த கிராமம் செங்கல்பட்டு நகரத்தை ஒட்டி உள்ளதால், நாளுக்கு நாள் வளர்ச்சி அடைந்து வருகிறது. இருப்பினும் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, கழிவு நீர் கால்வாய், சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து கிராம மக்கள் கூறியதாவது:கிராமத்தில் உள்ள தெருக்கள் மற்றும் சாலைகள் குண்டும் குழியுமாக உள்ளதால், கழிவுநீர் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. மேலும் செங்கல்பட்டு பகுதியில் பன்றி வளர்ப்போர், தங்களது பன்றிகளை இந்த கிராமத்தில் கொண்டு வந்து விட்டுச் செல்வதால், இவை கிராமத்தைச் சுற்றி உள்ள குப்பையை கிளறி வருகின்றன.எனவே, இந்த பகுதியிலுள்ள குப்பைகளை அகற்றி, கிராமத்திற்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ