உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு /  ஏரியில் மண் எடுப்பதை எதிர்த்து மெய்யூர் கிராமத்தினர் போராட்டம்

 ஏரியில் மண் எடுப்பதை எதிர்த்து மெய்யூர் கிராமத்தினர் போராட்டம்

மதுராந்தகம்: மெய்யூர் ஏரியில் மண் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று, கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுராந்தகம் ஊராட்சி ஒன்றியத்தில், மெய்யூர் ஏரி உள்ளது. இந்த ஏரியிலிருந்து மண் எடுக்க, 2023ம் ஆண்டு ஒப்பந்ததாரருக்கு, கனிம வளத்துறை அனுமதி அளித்தது. ஏரியில், 5 அடி ஆழம் வரை களிமண்ணை எடுத்த பின், பாலாற்று மணல் கிடைத்தது. இதனால், இந்த ஏரியில் மணல் எடுப்பதற்கு, ஒப்பந்ததாரர்களிடையே கடும் போட்டி நிலவியது. இதன்படி, கடந்தாண்டு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர், மோட்டார் மூலமாக ஏரியில் இருந்த தண்ணீரை வெளியேற்றி, மணல் மற்றும் வண்டல் மண் எடுக்கும் பணிகளை தொடர்ந்தார். இதனால் விவசாயம், நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படும் என்பதால், மெய்யூர் கிராம மக்கள் நேற்று, ஏரியில் மண் எடுத்த டிப்பர் லாரிகளை சிறை பிடித்து, ஏரியின் நுழைவாயில் பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற மதுராந்தகம் பாசன பிரிவு அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சு நடத்தினர். மேலும், தற்காலிகமாக மெய்யூர் ஏரியில் மண் எடுக்கும் பணி நிறுத்தப்படும் என உறுதி அளித்தனர். இதையடுத்து, மக்கள் கலைந்து சென்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை