உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மனுக்கள் பெற்ற அமைச்சர்

உள்ளாட்சி பிரதிநிதிகளிடம் மனுக்கள் பெற்ற அமைச்சர்

செங்கல்பட்டு:செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், நேற்று முன்தினம் மாலை கலெக்டர் அருண்ராஜ் தலைமையில், உள்ளாட்சி பிரதிநிதிகளுடன் கலந்துரையாடி, அமைச்சர் அன்பரசன் பொது மக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார்.இதில், இலவச வீட்டுமனை பட்டா, சாலை பராமரிப்பு, புதிய மின்மாற்றி அமைத்தல், முதியோர் உதவித்தொகை, நியாய விலைக் கடைக்கு புதிய கட்டடம் உள்ளிட்ட, 210 கோரிக்கை மனுக்கள் வரப்பெற்றன.திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில், 'பூம்பூம்' மாடு வைத்து வாழ்க்கை நடத்தி வரும் 21 குடும்பத்தினர், வீட்டுமனை கேட்டு மனு அளித்தனர்.தொடர்ந்து, கடந்த முறை நடந்த கூட்டத்தில் அளித்த மனுவின் மீது தீர்வு காணப்பட்டு, திருக்கழுக்குன்றம் தாலுகா, வல்லிபுரம் பகுதியை சேர்ந்த பெண்ணிற்கு, இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது.முருகமங்கலம் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கட்டப்பட்டு உள்ள குடியிருப்பில், 46 பயனாளிகளுக்கு வீடு ஒதுக்கீடு ஆணை வழங்கப்பட்டது.இந்த நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் சுபா நந்தினி, சப் - கலெக்டர் நாராயண சர்மா, கூடுதல் கலெக்டர் அனாமிகா, மாவட்ட வழங்கல் அதிகாரி சாகிதா பர்வீன், எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ