உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / தண்டலம் கோவிலில் உண்டியல் உடைப்பு

தண்டலம் கோவிலில் உண்டியல் உடைப்பு

திருப்போரூர்:திருப்போரூர் அடுத்த தண்டலம் ஊராட்சியில் அடங்கிய மேட்டுத்தண்டலம் கிராமத்தில், செங்கல்பட்டு சாலை ஒட்டி அய்யப்பன் கோவில் உள்ளது.நேற்று முன்தினம் இரவு பூஜைகள் முடிந்து அர்ச்சகர் குமார் கோவிலை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார் .நேற்று காலை 7:00 மணியளவில் கோவிலை திறக்க வந்தபோது கோவிலின் முன் மண்டபத்தில் இருந்த உண்டியலின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.அதிலிருந்த சில ஆயிரம் காணிக்கை பணம் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது.தகவல் அறிந்த திருப்போரூர் போலீசார், விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி