உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மறைமலைநகரில் மருந்தகத்தில் பணம் திருட்டு

மறைமலைநகரில் மருந்தகத்தில் பணம் திருட்டு

மறைமலைநகர்:மறைமலைநகர், அண்ணா சாலையில் தனியார் மருத்துவமனை மற்றும் மருந்தகம் செயல்பட்டு வருகிறது.இந்த மருந்தகத்தில், கல்யாண சுந்தரம் என்பவர், பணியில் இருந்தார். அதிகாலை 4:30 மணியளவில், மருந்தகத்திற்கு வந்த மர்ம நபர், சில மருந்துகளை கேட்டுள்ளார். கல்யாண சுந்தரம் உள்ளே மருந்து எடுக்க சென்ற போது, கல்லாப்பெட்டியில் இருந்த 14,000 ரூபாய் மற்றும் 'ஸ்வைப்பிங்' இயந்திரம் உள்ளிட்டவற்றை, மர்ம நபர் திருடிச் சென்றார்.இதுகுறித்து கல்யாண சுந்தரம், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.இதன்படி, மறைமலைநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை