உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / திருப்போரூரில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு

திருப்போரூரில் குரங்குகள் தொல்லை அதிகரிப்பு

திருப்போரூர்:திருப்போரூர் பேரூராட்சி பகுதியில் நான்கு மாடவீதிகள், சான்றோர் வீதி, கச்சேரி சந்து தெரு, திருவஞ்சாவடி தெரு, வணிகர் வீதி உள்ளிட்டவற்றில் ஏராளமான குரங்குகள் சுற்றித் திரிகின்றன. வீதிகளில் விளையாடும் சிறுவர்களை அவை துரத்தி துரத்தி கடிக்கின்றன. குடியிருப்பு பகுதிகளில் உள்ள வீட்டிற்குள் நுழையும் குரங்குகள் சமையல் பொருட்கள், காய்கறிகள், உணவு வகைகளையும் பதம்பார்க்கின்றன. பகலில் கூட வீட்டை திறந்து வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.அதேபோல், திருப்போரூரில் உள்ள கந்தசுவாமி கோவில், பிரணவ மலைக்கோவில்களிலும் குரங்கு தொல்லைகள் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது.கூட்டமாக வரும் குரங்குகள், பக்தர்கள் கொண்டு வரும் பழம், தேங்காய் உள்ளிட்ட பூஜை பொருட்களை பறித்து சென்று விடுகின்றன. நேற்று பக்தர் ஒருவரை கடிக்க முயன்றது. பின், அவர் வைத்திருந்த உடைமைகளை பறிக்க முயன்ற போது, அருகே இருந்த பக்தர்கள் குரங்கை துரத்தி விட்டனர்.எனவே, திருப்போரூர் வாசிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி, திருப்போரூர் குடியிருப்பு பகுதி மற்றும் கோவிலில் சுற்றித்திரியும் குரங்குகளை பிடித்து, வனப்பகுதியில் விட பேரூராட்சி நிர்வாகம், வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை