உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / மையத்தடுப்பில் மோதிய சொகுசு பஸ் 10க்கும் மேற்பட்ட பயணியர் காயம்

மையத்தடுப்பில் மோதிய சொகுசு பஸ் 10க்கும் மேற்பட்ட பயணியர் காயம்

மதுராந்தகம்:மதுராந்தகம் அருகே, சென்னை நோக்கிச் சென்ற சொகுசு பேருந்து, சாலை மைய தடுப்பில் மோதி விபத்து ஏற்பட்டது.ராமேஸ்வரத்திலிருந்து நேற்று முன்தினம் இரவு, பாக்கியலட்சுமி தனியார் சொகுசு பேருந்து, 30க்கும் மேற்பட்ட பயணியருடன், சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.மதுராந்தகம் அருகே சென்னை -- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில், அய்யனார் கோவில் சந்திப்பு பகுதியில், நேற்று விடியற்காலை 4:30 மணியளவில் பேருந்து வந்த போது, அங்கு 'பொக்லைன்' வாகனம் ஒன்று சாலையை கடக்க முயன்றுள்ளது.அதன் மீது மோதாமல் இருக்க, சொகுசு பேருந்து ஓட்டுநர் திடீர் 'பிரேக்' பிடித்ததால், சாலையின் மைய தடுப்பில் மோதி, ஒரு புறமாக சாய்ந்தது.தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற மதுராந்தகம் போலீசார், விபத்தில் லேசான காயமடைந்த 10க்கும் மேற்பட்டோரை, மதுராந்தகம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு முதலுதவி சிகிச்சை பெற்ற அவர்கள், மாற்று பேருந்தில் சென்னை சென்றனர்.இந்த விபத்தால், ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ