உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / சாலையில் படிந்துள்ள மணல் திட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி

சாலையில் படிந்துள்ள மணல் திட்டு வாகன ஓட்டிகள் கடும் அவதி

மறைமலை நகர்:-சிங்கபெருமாள் கோவில் -- ஸ்ரீபெரும்புதுார் நெடுஞ்சாலை 25 கி.மீ., நீளம் உடையது. இந்த சாலையில் தினமும் பல்லாயிரக்கணக்கான கனரக வாகனங்கள், இருசக்கர வாகனங்கள் சென்று வருகின்றன.ஒரகடம், ஸ்ரீபெரும்புதுார் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்லும் வாகனங்கள் இந்த சாலை வழியாக சென்று வருகின்றன.இந்த சாலையில் தெள்ளிமேடு, கொளத்துார், ஆப்பூர், சேந்தமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் சாலையின் இருபுறமும் மணல் திட்டுகள் தேங்கி உள்ளதால் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.இது குறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:நெடுஞ்சாலையில் பல இடங்களில் மண் நிரம்பி உள்ளதால் இருசக்கர வாகனங்கள் வேகமாக செல்லும்போது வழுக்கி விழுந்து விபத்து ஏற்படுகிறது. மண் துகள்கள் வாகன ஓட்டிகளின் கண்ணில் பட்டு சிரமம் ஏற்படுகிறது. கடந்த மாதம் ஆப்பூர் பகுதியில் சாலையை கடக்க முயன்ற வாகனம் மணல் படிந்த சாலையில் சென்ற போது நிலைதடுமாறி சாலையில் கவிழ்ந்தது. எனவே பெரிய அளவில் விபத்து ஏற்படும் இந்த சாலையில் பல இடங்களில் படிந்து உள்ள மணல் திட்டுகளை அகற்ற மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ