உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / செங்கல்பட்டு / ஜி.எஸ்.டி., சாலையில் செம்மண் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

ஜி.எஸ்.டி., சாலையில் செம்மண் விபத்தில் சிக்கும் வாகன ஓட்டிகள்

மறைமலைநகர், திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் தினமும், பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.இந்த சாலை தென் மாவட்டங்களை இணைக்கும் முக்கிய நெடுஞ்சாலை. தற்போது, சிங்கபெருமாள் கோவில் பகுதியில், ரயில்வே மேம்பாலம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.இங்கு சாலையின் இரண்டு மார்க்கத்திலும், சரிபாதி அளவிற்கு செம்மண் குவிந்து, மண் சாலையாக மாறி உள்ளது.இதனால், மணல் துகள்கள் காற்றில் பறந்து, வாகன ஓட்டிகள் கண்களை பதம்பார்க்கின்றன. மழை பெய்யும் போது, சேறும் சகதியுமாக மாறுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுகின்றனர். இதை தவிர்க்க வாகன ஓட்டிகள் சாலையின் மையத்தில் செல்லும் போது, கனரக வாகனங்கள் மோதி விபத்தில் சிக்குகின்றனர்.எனவே, இப்பகுதியில் குவிந்துள்ள மண்ணை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை